தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 26, 2019, 10:03 AM IST

ETV Bharat / state

சூரிய கிரகணத்தை ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் விநோத முறை!

தருமபுரி: சூரிய கிரகணம் தொடங்கியதை தெரிந்துகொள்ள ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து பார்க்கும் பழங்காலமுறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டது.

Solar eclipse
Solar eclipse

சூரிய கிரகணம் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் சூரிய கிரகணம் தொடங்குவதையும், சூரிய கிரகணம் முடிவதையும் அறிந்து கொள்ள ஏராளமான தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன.

பண்டைய காலம் தொட்டு இன்று வரை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் தொடங்குவதையும் முடிவதையும் உறுதி செய்ய கிராமங்களில் ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து கொள்ளும் முறைதான் நடைமுறையில் உள்ளது. அதன்படி, ஆட்டுக்கல்லில் உலக்கையை வைக்கும்போது கிரகணத்தின்போது செங்குத்தாக நிற்குமாம். அப்படி உலக்கை செங்குத்தாக நின்றால், அன்று கிரகணம் என பண்டைய கால மக்கள் உறுதி செய்துள்ளனர்.

அதன்படி, தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியில் கிரகணம் தொடங்கும்பொழுது ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து, கிரகணத்தை பரிசோதிக்கின்றனர். அப்போது, ஆட்டுக்கல்லில் உலக்கை செங்குத்தாக நிற்கிறது. கிரகணம் முடிந்த பிறகு தானாகவே, உலக்கை ஆட்டுக் கல்லில் இருந்து கீழே விழுந்து விடும் என்கிறார்கள். இந்த முறையைத்தான் கிராம மக்களும், நமது மூதாதையர்களும் கடைப்பிடித்து வந்தனர்.

சூரிய கிரகணத்தை விநோதமான முறையில் உறுதி செய்யும் முறை

இதையும் படிங்க: சூரிய கிரகணம்: சிறப்பு ராசி பலன் 26-12-2019

ABOUT THE AUTHOR

...view details