தமிழ்நாடு

tamil nadu

தருமபுரியில் தக்காளி வரத்து குறைவு - சந்தையில் அதிக விலைக்கு விற்பனை

தருமபுரி: தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக உள்ளூர், வெளிச் சந்தையில் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

By

Published : Jul 7, 2020, 5:18 PM IST

Published : Jul 7, 2020, 5:18 PM IST

சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை
சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை

தருமபுரி மாவட்டத்தில் பிரதான தொழிலான விவசாயத்தில் தக்காளி சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்று காரணமாக விவசாயிகள் தங்காளி சாகுபடி அளவையும் குறைத்துள்ளனர்.

தக்காளி வரத்து குறைவு காரணமாக உள்ளூர் சந்தையில் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில நாள்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி இன்று கிலோ 44 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெளிச்சந்தையில் தக்காளி விலை 50 முதல் 55 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: வரத்து அதிகரிப்பு; தக்காளி விலை கடும் வீழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details