தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மோட்டுப்பட்டி கிராமத்தில் அரிசி வியாபாரம் செய்துவருபவர் ராமன். இவர் வியாபாரத்துக்காக வெளியில் சென்றுள்ளார். ராமனின் மனைவி லதா உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இவர்களின் வீடு பூட்டப்பட்டிருந்ததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்து 17 லட்சம் ரூபாய், 48 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டின் கதவை உடைத்து திருட்டு! இதனையடுத்து, வீட்டிற்குச் சென்று பார்த்த ராமன் அதிர்ச்சியடைந்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
திருட்டு நடந்த வீட்டின் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த சிசிடிவி காட்சியில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் அங்குமிங்கும் சென்றுவருவது பதிவாகியுள்ளது. இந்தத் திருட்டு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.