தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேவுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உலர் உணவுப் பொருள்களை வழங்க பள்ளி நிர்வாகம் அழைப்புவிடுத்தது.
இதனையடுத்து மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்றனர். தொடர்ந்து உலர் உணவுப் பொருள்களை மாணவர்கள் பெற்றுச் சென்றனர்.
அப்போது தனியாக இருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, அதே பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் கோவிந்தன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர் கோவிந்தனை, காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.
இதனையடுத்து மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த கோவிந்தனை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா உத்தரவிட்டார்.