தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் ரூ.11 லட்சம் திருட்டு - சிசிடிவி உதவியுடன் போலீஸ் விசாரணை

தர்மபுரியில் தனியார் பார்சல் அலுவலகத்தின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த 11 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற நபர் குறித்து, சிசிடிவி காட்சி உதவியுடன் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Etv Bharat தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் ரூ.11 லட்சம் திருட்டு
Etv Bharat தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் ரூ.11 லட்சம் திருட்டு

By

Published : Aug 6, 2022, 3:58 PM IST

தர்மபுரி:சவுலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை அருகே உள்ள தனியார் பார்சல் அலுவலகத்தை சங்கர் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி இரவு வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு டெலிவரி செய்த பணத்தை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இரவு நேரத்தில் தனியார் பார்சல் அலுவலகத்தின் பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர் உள்ளே இருந்த லாக்கரை உடைத்து 11 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுவிட்டார். இதனையடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை அலுவலகத்தை திறப்பதற்காக வந்த சங்கர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகத்தில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் ரூ.11 லட்சம் திருட்டு

மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர். அதில், தனியார் பார்சல் டெலிவரி அலுவலகத்தில் நுழைந்து ஒருவர் பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த பணத்தை திருடிச் சென்ற நபர் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் - மோசடி கும்பல் கைது

ABOUT THE AUTHOR

...view details