தமிழ்நாடு

tamil nadu

வேகமாக பரவி வரும் இரண்டாம் கட்ட கரோனா அலை:  அரசு மருத்துவர்கள் அறிவுரை

By

Published : Apr 10, 2021, 2:05 PM IST

தருமபுரி: இரண்டாம் கட்ட கரோனா அலை நோய் வேகமாக பரவுவதால், கரோனா தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.

corona virus
வேகமாக பரவி வரும் இரண்டாம் கட்ட கரோனா அலை: தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு மருத்துவர்கள் அறிவுரை

ஓசூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பூபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசிய அவர், “தற்போது கரோனா நோய் இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது, இரண்டாம் கட்டமாக பரவும் கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள அனைவரும் முகக்கவசம், கிருமி நாசினி பயன்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தற்காத்து கொள்ள வேண்டும்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக தனி வார்டு திறக்கப்படுள்ளது

ஓசூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக தனி வார்டு திறக்கப்படுள்ளது. இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசியும், பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறோம். இதனை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதுவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள், முன்கள பணியாளர்கள் என 7,180 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கொரோனா சமயத்தில் ஓசூரில் ஒரு இறப்பு மட்டுமே பதிவானது. கரோனோ நோய்க்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதேபோல் இந்த ஆண்டும் நல்ல சிகிச்சைகளை வழங்கி பொதுமக்களை காப்போம்” என்றார்.

இதையும் படிங்க: மாஸ்க் இல்லாமல் ஹாயாக வலம் வரும் சுற்றுலாப் பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details