தமிழ்நாடு

tamil nadu

பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பொதுமுடக்கம் வராது - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

By

Published : Jan 10, 2022, 10:01 PM IST

பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால், பொதுமுடக்கம் வராமல் தடுக்க முடியும் என தருமபுரியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பொதுமுடக்கம் வராது
பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பொதுமுடக்கம் வராது

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் எத்தனை விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுள்ளனர் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பொதுமுடக்கம் வராது

இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாமினைத் தொடங்கிவைத்தார். பின்னர் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தினை பன்னீர்செல்வம் ஆய்வுசெய்தார்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அரசு அறிவித்துள்ளது. இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வெளியே வர வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துவருகிறார்கள்.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இதனை அந்தந்தப் பகுதியில் உள்ள அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

ஆகவே முழு ஊரடங்கைச் சந்திக்காமல் இருக்க நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். வள்ளலார் கூற்றுப்படி தனித்திருக்கணும், விழித்திருக்கணும்" என்றார்.

இதையும் படிங்க: மண்பாண்டங்களை மறந்த மண்ணின் மைந்தர்கள்: மாறிவரும் பண்பாடு?

ABOUT THE AUTHOR

...view details