2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தருமபுரியில் போட்டியிட்ட டாக்டர். செந்தில்குமார் வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு வசதியாக அப்பாவு நகரில் அலுவலகம் ஒன்றை செந்தில்குமார் திறந்துவைத்தார். இதனிடையில், தருமபுரி மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க வருகை தந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை நேற்று (பிப். 17) திறந்து வைத்தார்.