தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டப் பகுதிகளில் உள்ள முதலமைச்சாின் சிறப்பு குறைதீர் முகாமில், மனுக்கள் அளித்த 682 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில், 2 கோடியே 48 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழ்நாடு உயா் கல்வித்துறை அமைச்சா் அன்பழகன் வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய அமைச்சா், 'தமிழ்நாட்டில் மக்கள், அலுவலர்களை நாடி மனுக்கள் கொடுக்கும் நிலை இருந்ததால் மனுக்கள் மீதான தீர்வு கால தாமதமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் மூலம் அலுவலர்களே மக்களைச் சந்தித்து மனுக்கள் பெற்று, உடனடியாகத் தீர்வு காணப்பட்டு வருகிறது.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கியது, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.பி.அன்பழகன் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி, ஆண்டிற்கு 1 லட்சம் பெண்களுக்கு, 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதும் தமிழ்நாடு அரசு தான். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்குப் பல திட்டங்களை கொண்ட அரசாகவும் தமிழ்நாடு அரசு உள்ளது' எனத் தொிவித்தார்.
இதையும் படிங்க: ‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக’