தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏறி முழுமையாக நிரம்பி தண்ணீர் வெளியேறியது.
ஆகாயத்தாமரைகள் தண்ணீரை விரைவாக ஆவியாகும் தன்மை கொண்டது இதனால் ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்திருப்பதால் நிரம்பிய தண்ணீர் இரண்டே நாட்களில் சுமார் ஒன்றரை அடி குறைந்துள்ளது. அதை அகற்ற முடிவு செய்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி,தனது சொந்த பணத்தில் இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் துணையோடு இரண்டு பரிசல்களில் சென்று ஏரியில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியை தொடக்கிவைத்தார்.
ஆகாயத்தாமரை அகற்றும் பணியை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தொடங்கிவைத்தார். இலக்கியம்பட்டி ஏரியில் கொக்கு, வெளிநாட்டு பறவைகள் அதிகளவு இறை தேடி வருகின்றன. ஆகாயத்தாமரை, தண்ணீர் முழுவதும் பரவிக் கிடப்பதால் பறவைகள் வரத்து குறைந்துள்ளது. ஆகாயத்தாமரை அகற்றப்படுவதால் பறவைகள் தேவையான உணவைத் தேடி ஏரிக்கு வரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து இளைஞர்களும் ஏரியில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, 'தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மழைநீரை சேகரிக்கும் பொருட்டு குடிமராமத்து பணியை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செய்து வருகிறார். குடிமராமத்து பணி தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இலக்கியம்பட்டி ஏரிக்கு வந்து செல்லக்கூடிய தண்ணீர், சனத்குமார் நதியில் கலக்கிறது. ரூ. 50 கோடி மதிப்பில் விரைவில் சரத்குமார் நதி புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. இலக்கியம்பட்டி ஏரியில் உள்ள தண்ணீர் இரண்டே நாளில் ஒன்றரை அடி நீர்மட்டம் குறைந்ததை இலக்கியம்பட்டி இளைஞர்களோடு சேர்ந்து ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஆழ்துளைக் கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு