தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிய விலை கிடைக்காததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முள்ளங்கி; விவசாயிகள் வேதனை

தருமபுரியில் முள்ளங்கி பயிரிட்ட விவசாயிகள் நன்கு விளைச்சல் இருந்தும் உரிய விலை இல்லாததால் பயிரிட்ட நிலத்திலேயே முள்ளங்கியை அழித்துவருகின்றனர்.

உரிய விலை கிடைக்காததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முள்ளங்கி; விவசாயிகள் வேதனை..
உரிய விலை கிடைக்காததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முள்ளங்கி; விவசாயிகள் வேதனை..

By

Published : Jan 20, 2023, 11:16 AM IST

உரிய விலை கிடைக்காததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முள்ளங்கி; விவசாயிகள் வேதனை..

தருமபுரி:கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்து வந்ததன் பயனாக தருமபுரியில் அணைகள், நீர்நிலைகள், குளம் குட்டைகள் நிரம்பி உள்ளன. நீர் நிலையும் நன்கு இருந்ததாலும் 40 நாட்களில் இருந்து 45 நாட்களுக்குள் சாகுபடி செய்யப்படுவதாலும் தருமபுரி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் காய்கறி சாகுபடியில் முள்ளங்கியை அதிக அளவு பயிரிட்டு வந்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் இருந்து முள்ளங்கி பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில் பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் அதிக அளவு முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பாலக்கோடு வட்டத்தில் கொட்டு மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவர் தனது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த முள்ளங்கிக்கு உரிய விலை கிடைக்காததால் பயிரிட்ட தோட்டத்திலேயே டிராக்டரை விட்டு முள்ளங்கியை அழித்து வருகின்றார். அதோடு ஆடு மாடுகளுக்கு தீவனமாக வழங்கி வருகின்றார்.

கடந்த காலங்களில் கிலோ ரூபாய் 25 வரை விற்பனையான முள்ளங்கி தற்போது கிலோ ஏழு ரூபாய்க்கு தான் விற்பனையாகிறது. ஒரு ஏக்கரில் 40 ஆயிரம் வரை செலவு செய்து முள்ளங்கி பயிரிட்டு அமோக விளைச்சல் கிடைத்தும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். உற்பத்தி செலவுகுக்கு கூட கட்டுபடி ஆகாததால் விளைந்த முள்ளங்கியை நிலத்திலே உழவு செய்தும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் விவசாயிகள் வழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம், நடுகல் கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details