தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 18, 2019, 5:45 PM IST

ETV Bharat / state

தமிழ் உரிமையை மீட்க தொடர்ந்து பாடுபடுவேன் - இயக்குநர் கெளதமன்

தருமபுரி: இழந்து வரும் தமிழ் இனத்தின் உரிமைகளை மீட்டெடுக்கத் தொடர்ந்து பாடுபடுவேன் என திரைப்பட இயக்குநர் கெளதமன் கூறினார்.

director gowthaman

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சிவாடி பகுதியில் தனியார் எண்ணெய் நிறுவனம் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலங்களைக் கையகப்படுத்திவருகின்றது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குநரருமான கௌதமன் சிவாடி பகுதிகளைப் பார்வையிட முடிவு செய்திருந்தார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு அப்பகுதியில் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இதுகுறித்து விளக்கம் கேட்க இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அவர் வந்திருந்தார்.

அப்போது தொலைபேசியில் தொடர்புகொண்ட தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதமனுக்குப் பார்வையிட அனுமதி வழங்கினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கௌதமன், "தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் பொருட்டு, இதுவரை 20 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். தருமபுரி மாவட்டம் சிவாடி, அரியகுளம் பகுதிகளில் தனியார் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் வாழக்கூடிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இழந்த தமிழ் உரிமையை மீட்க தொடர்ந்து பாடுபடுவேன்

மக்களின் கருத்துக்களைக் கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளேன்” என்றார்.


இதையும் படிக்கலாமே: டிஜிட்டல் பேனர் தடையால் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா!

ABOUT THE AUTHOR

...view details