தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், ஏரியூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (பிப்.21) இரவு திடீரென சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழையும் பெய்தது. சுற்றுவட்டார பகுதிகளான மலையனூர், புது நாகமரை, பெல்லூர், இராமகொண்ட அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன.
பென்னாகரத்தில் சூறைக்காற்று: வாழை மரங்கள் சேதம்!
தர்மபுரி: பென்னாகரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீடிரென கனமழையுடன் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Hevay Hurricane In Pennagaram
வாழை மரங்கள் சேதமடைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். சேதமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சூறாவளி காற்றுடன் மழை: பல லட்ச மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்!