தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.25 கோடிக்கு பருத்தி ஏலம்

தருமபுரி: அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கத்தில் இந்த வாரம் ரூ. 2.25 கோடிக்கு பருத்தி ஏலம் போயுள்ளது.

அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கம் பருத்தி ஏலம்  பருத்தி ஏலம்  cotton sale harur
பருத்தி மூட்டைகள்

By

Published : Jan 29, 2020, 9:44 AM IST

நடப்பு ஆண்டிற்கான பருத்தி ஏலம் கடந்த வாரம் தொடங்கி, அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரைத் தேங்காய்களை எடுத்துவந்து விற்பனை செய்கின்றனர்.

இந்த வார பருத்தி ஏலத்தில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்து 640 விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், விவசாயிகள் எடுத்துவந்த பத்தாயிரம் பருத்தி மூட்டை ரூ. 2.25 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

விவசாயிகள் எடுத்து வந்திருந்த பருத்தி மூட்டைகள்

ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 4,870 முதல் ரூ. 5,716 வரையிலும், வரலட்சுமி ரகம் ரூ. 6,259 முதல் ரூ. 7,259 வரையிலும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தியின் வரத்து ஐந்தாயிரம் மூட்டை அதிகரித்திருந்தது. கடந்த வாரம் ரூ. 85 லட்சத்திற்கு விற்பனையான பருத்தி, இந்த வாரம் ரூ. 1.50 கோடி அதிகரித்து ரூ. 2.25 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

இதையும் படிங்க:15 ஆண்டுகளுக்கான பணிகளை ஒரே ஆண்டில் முடித்திருக்கிறோம்’

ABOUT THE AUTHOR

...view details