தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (பிப். 20) நடைபெற்றது. தமிழக உயர் கல்வி, வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்து கொண்டு ஆயிரத்து, இருநூற்று அறுபத்து ஏழு பயனாளிகளுக்கு 10 கோடியே 82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே. பி அன்பழகன்
தர்மபுரி: தமிழ்நாடு உயர் கல்வி, வேளாண்துறை அமைச்சர் கே.பி . அன்பழகன் ஆயிரத்து, இருநூற்று அறுபத்து ஏழு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Breaking News
இந்நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப்பட்டா, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி, மாற்றுத்திறனாளிகள் நிதி உதவி, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ், அம்மா இரு சக்கர வாகனம், தாலிக்குத் தங்கம், வேளாண்மை, தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்குப் பொருள்கள் போன்றவற்றை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.