தர்மபுரி மாவட்டம், அரூா் சட்டப்பேரவைத்தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன் போட்டியிடுகிறார். முதல் நாள் பரப்புரையாக அரூர் தொகுதிக்குட்பட்ட கோட்டப்பட்டி, பையர்நாயக்கன்பட்டி சிட்லிங், நரிப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் வீடு வீடாகச் சென்று அமமுக வேட்பாளர் முருகன் வாக்கு சேகரித்தார்.
அப்போது, மலைக்கிராம பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் பேசிய முருகன், "கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
ஓராண்டு மட்டுமே இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்ற முடிந்தது. ஓராண்டு மட்டுமே நான் பணியாற்றியதால் தொகுதிக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை கொண்டுவர இயலாமல் போனது.
ஆருரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளர் ஆனால், அந்த காலக்கட்டத்தில் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை தொகுதிக்கு கொண்டு வந்துள்ளேன். தற்பொழுது மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், குடிநீர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட ஜீவாதாரப் பிரச்னைகள், கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வீட்டுக்கொருவருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்" என்றார்.