தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 18, 2021, 5:56 PM IST

ETV Bharat / state

தர்மபுரியில் டிப்ளமோ இன் அக்ரி படிப்பு தொடக்கம்!

தர்மபுரி: டிப்ளமோ இன் அக்ரி (Diploma in Agri) படிப்பு தொடங்க அரசாணை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகள் உடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு, 210 மாற்றுத் திறனாளிகளுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை வழங்கினார்.

அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தர்மபுரி மாவட்டம் விவசாயத்தையே நம்பியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயக் கல்லூரி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

தர்மபுரியில் டிப்ளமோ இன் அக்ரி (Diploma in Agri) படிப்பு, இந்த ஆண்டு தொடங்க அரசாணை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே தர்மபுரியில் பல்வேறு வகையான கல்லூரிகள் உள்ளன. மேலும் 1,783 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்!

ABOUT THE AUTHOR

...view details