தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதிய தண்ணீர் இருந்தும் குடிநீருக்காக அலையும் கிராம மக்கள்

தருமபுரி : கடத்தூர் அருகே ஒரே இடத்தில் குழு தெருக்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால், போதிய தண்ணீர் இருந்தும் குடிநீருக்காக கிராம மக்கள் அலைமோதி வருகின்றனர்.

dharmapuri Water Problem

By

Published : Jul 3, 2020, 5:27 PM IST

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மடதள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் மடதள்ளி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக ஏரி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தெருக்களில் ஆங்காங்கே குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதிய மழையில்லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நிரப்பப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது. அப்பொழுது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தாழ்வான பகுதிகளுக்கு அதிகமாக செல்வதால், மற்ற பகுதிகளுக்கு குடிநீர் இல்லாமல் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதனால் இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் மூன்று இடங்களில் ஒரே இடத்தில், 10-க்கும் மேற்பட்ட குழு குழாய்கள் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. கிராமத்தில் போதிய அளவிற்கு தண்ணீர் கிடைத்தும் ஒரே இடத்தில் கிராம மக்கள் அனைவரும் தண்ணீர் பிடிக்கும் சூழல் இருப்பதால் கிராமத்தில் உள்ள பெரியவர், சிறியவர், குழந்தைகள் என அனைவரும் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

மேலும் தண்ணீர் பிடிக்க வரும் கிராம மக்கள் சாலையை கடந்து சென்று தண்ணீர் பிடிக்கும் சூழல் இருக்கிறது. இந்தப் பகுதியில் ஜல்லி கிரஷர் இருப்பதால் ஏராளமான லாரி போக்குவரத்து அதிகமாக உள்ள காரணத்தால் மக்களுக்கு அடிக்கடி இடையூறுகள் ஏற்படுகிறது.

தற்போது கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், மக்கள் கூட்டமாக கூட்டமாக, தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் தண்ணீர் பிடிப்பதால் வைரஸ் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது.

எனவே வைரஸ் தொற்று முழுமையாக தடுக்கப்படும் வரையில் மடதள்ளி கிராமத்திற்கு ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றி, தெருக்களில் மூன்று இடங்களில், நான்கு இடங்களில் சிறு குழாய்கள் அமைத்து கொடுத்தால் போதிய அளவு தண்ணீர் கிடைக்கும்.

ABOUT THE AUTHOR

...view details