தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரி வாக்காளர் பட்டியல் - மொத்தம் 12 லட்சத்து 35 ஆயிரத்து 534 வாக்காளர்கள்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இன்று 2021ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டார்.

dharmapuri election id, dharmapuri voters list, collector karthika released voters list, தர்மபுரி வாக்காளர் பட்டியல், சட்டப்பேரவை தேர்தல் வாக்காளர் பட்டியல், சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியல்
dharmapuri voters list

By

Published : Nov 16, 2020, 1:34 PM IST

தர்மபுரி: மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டார்.

மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் திருத்த பட்டியலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பட்டியலைப் பெற்று கொண்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 12 லட்சத்து 35 ஆயிரத்து 534 மொத்த வாக்காளர்கள். அதில், 6 லட்சத்து 27 ஆயிரத்து 332 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 8 ஆயிரத்து 64 பெண் வாக்காளர்களும், 138 இதர வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதி

  • மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 183
  • ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16ஆயிரத்து 957
  • பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 210
  • இதர வாக்காளர்கள் 16

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி

  • மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 647
  • ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 888
  • பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 752
  • இதர வாக்காளர்கள் 7

தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதி

  • மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 62 ஆயிரத்து 366
  • ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 658
  • பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 607
  • இதர வாக்காளர்கள் 101

பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி

  • மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 59ஆயிரத்து 457
  • ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 571
  • பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 879
  • இதர வாக்காளர்கள் 7

அரூர் சட்டப்பேரவைத் தொகுதி

  • மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 881
  • ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258
  • பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 616
  • இதர வாக்காளர்கள் 7
    மாவட்ட ஆட்சியர் கார்த்திகா பேட்டி

அதிமுக சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வரைவு வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details