தருமபுரி மாவட்டம், கொண்டகரஹள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்டது வத்தல்மலை மலை கிராமம். இதனைச் சுற்றி பெரியூர், நாய்க்கனூர், மண்ணாங்குழி, பால் சிலம்பு, ஒன்றிக்காடு, சின்னாங்காடு, கொட்டலாங்காடு, குள்ளனூர் என எட்டு மலைக் கிராமங்கள் உள்ளன.
இங்கு, முற்றிலும் மலைவாழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய முக்கிய தொழில் விவசாயமாகும்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக இங்கு மதுக்கடைகள் மூடப்பட்டதால் ஒரு சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்துள்ளனர்.
இதில், கொட்டங்காடு பகுதியைச் சேர்ந்த குமார்(44), மாணிக்கம் (45) ஆகிய இருவரும் ஏப்ரல் 3ஆம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரிடம் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். பிறகு, அதற்கு பிறகு பலாப்பழம் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இவரும் திடீரென சம்பவ இடத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணிக்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு
!