தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மாவட்டங்களைப் பிரிப்பதால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது’ - கே. பாலகிருஷ்ணன்

தருமபுரி: மாவட்டங்களைப் பிரிப்பதால் எந்த வளர்ச்சியும் ஏற்படப்போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

cpim-balakrishnan

By

Published : Oct 10, 2019, 7:28 PM IST

காவிரி, தென்பெண்ணை ஆறுகளின் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி ‘மக்கள் கோரிக்கை மாநாடு’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘மாவட்டங்களைப் பிரிப்பதால் தமிழ்நாடு வளர்ச்சி அடையாது. இதுவரை பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் வளர்ச்சி அடையவில்லை. தருமபுரி மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இங்குள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் வீட்டுக்கு ஒருவர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் குடிபெயர்ந்து வேலை செய்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கே. பாலகிருஷ்ணன் பேச்சு

தொடர்ந்து பேசிய அவர், ‘ஒகேனக்கல் நீர் மின் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்க வேண்டும். காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் மழைக் காலங்களில் உபரி நீராக ஓடும் நீரை மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details