தமிழ்நாடு

tamil nadu

தருமபுரி மாவட்ட ஆட்சியர் பேருந்து நிலையத்தில் ஆய்வு

By

Published : Mar 18, 2020, 6:39 PM IST

தருமபுரி: கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்

தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இது குறித்து தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஆய்வு செய்தார்.

அப்போது, பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறதா என்பதை ஆய்வு செய்த அவர், பேருந்து நிறுத்தத்திற்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிக்க உத்தரவிட்டார்.

மேலும், கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும், கிருமிநாசினியை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்

அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி வழங்கவேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியா் ஆய்வில் தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா, மருத்துவ துணை சுகாதார இயக்குநர் ஜெமினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: வெறிச்சோடிய வால்பாறை

ABOUT THE AUTHOR

...view details