தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் நடைபெற்ற குழந்தைத் திருமண விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

தருமபுரி: குழந்தைத் திருமண முறையை முடிவுக்குக் கொண்டுவருதல், பெண் சிசுக் கொலையைத் தடுப்பது ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

By

Published : Feb 14, 2020, 8:25 AM IST

Child marriage awareness function
Child marriage awareness function

தேசிய குடும்பநல ஆய்வின்படி இந்தியாவில் நடக்கும் குழந்தைத் திருமணத்தில் 17 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சேலம், தருமபுரி, சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 1,458 குழந்தைத் திருமண வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் இந்தியா 13ஆவது இடத்தில் உள்ளது. 43 விழுக்காடு இந்திய சிறுமிகளுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் ஆகிவிடுகிறது. இதையடுத்து குழந்தைத் திருமணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருகிறது.

அதன்படி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற குழந்தைத் திருமண முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தும் பெண் சிசுக் கொலையைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சி குழுவை மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

தருமபுரியில் நடைபெற்ற குழந்தைத் திருமண விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

இந்தக் கலைக்குழுவனாது பிப்ரவரி12ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஒன்றியங்களில் ஆகிய பகுதிகளிலுள்ள கிராமங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன.

இதையும் படிங்க: சிறுவனை காலணியை கழற்றுமாறு கூறிய விவகாரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details