தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் கல்வித்துறை அமைச்சர் இல்ல திருமணத்தில் முதலமைச்சர் பங்கேற்பு!

தருமபுரி: உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனின் மகன் சசிமோகன் - பூர்ணிமா தம்பதியின் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர்

By

Published : Nov 10, 2019, 6:12 PM IST

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், தருமபுரி மாவட்ட கழகச் செயலாளருமான கே.பி. அன்பழகன் - மல்லிகா தம்பதி ஆகியோரின் இளைய மகன் அ. சசிமோகன், சென்னையைச் சேர்ந்த கே. மனோகரன் - குமுதம் ஆகியோரின் மகள் எம். பூர்ணிமா ஆகியோரின் திருமணம் கடந்த 30ஆம் தேதி திருப்பதி திருமலையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருமண வரவேற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஹள்ளியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், ‘தருமபுரி மாவட்டத்தை அதிமுக கோட்டையாக மாற்றி, கடந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் வெற்றி பெற வைத்தவர் அமைச்சர் அன்பழகன். அவரது இல்ல விழா என்பது, கழக திருமண விழாவாகும். இந்த விழாவில் கலந்து கொண்டு, மணமக்களை என் நெஞ்சார வாழ்த்துகிறேன்.

உயர்கல்வித் துறை அமைச்சர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர்

மேலும், அன்பழகன் ஆரம்ப காலங்களில் இருந்து கட்சிக்காக உழைத்து மாவட்டச் செயலாளராக உயர்ந்துள்ளார். மாவட்ட குழு உறுப்பினர் மட்டுமல்லாது, தொடர்ந்து ஒரே தொகுதியில் 20 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்தியாவில் உயர்கல்வி படிப்போர் சதவீதம் அதிகம் என்ற சகாப்தத்தை அவர் உருவாக்கியுள்ளார். உயர்கல்வி படிப்போரில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. இதற்கு காரணமும் அவர்தான்’ என்றார்.

இதையும் படிங்க: அரசியல் வெற்றிடத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் நிரப்பிவிட்டனர்: அமைச்சர் கடம்பூர் ராஜு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details