தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் எனது அரசியல் வாக்குறுதி' - அன்புமணி ராமதாஸ்

தருமபுரி: "ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் கண்டிப்பாக நிறைவேறும். இதை அரசியல் வாக்குறுதியாக நான் அளிக்கிறேன்" என பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 26, 2021, 7:47 AM IST

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அன்புமணி பரப்புரை
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அன்புமணி பரப்புரை

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து கடத்தூரில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தருமபுரி மண்ணை மிதித்தவுடன் உணர்ச்சி பொங்குகிறது.

இந்தத் தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல் ஆகும். மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி. ஒரு விவசாயிக்கும், அரசியல் வியபாரிக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது ஆகும். தமிழ்நாட்டில் பாமக அதிக வாக்குகள் பெற்றது இந்த பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்தான்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அன்புமணி ராமதாஸ் பரப்புரை

40 ஆண்டுகள் போராட்டத்தின் பலனாக 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. ஸ்டாலின் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்து செய்யத் துடிக்கிறார். ஆகவே அவர் வெற்றிபெறக் கூடாது, அது ஒரு போதும் நடக்காது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விவசாயி முதலைமைச்சராகியுள்ளார்.

திமுகவில் பணம் வைத்திருந்தால் சீட்டு. திமுக என்றால் சொகுசு. தமிழ்நாட்டில் வன்னியர் போன்ற பின் தங்கிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடுகள் பெற்றுத் தருவோம். மொரப்பூர்-தர்மபுரி ரயில்வே திட்டப்பணி நடைபெற்று வருகிறது. ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் கண்டிப்பாக நிறைவேறும். இதை அரசியல் வாக்குறுதியாக நான் உங்களுக்கு அளிக்கிறேன். இது தேர்தல் வாக்குறுதி அல்ல. அரசியல் வாக்குறுதி" என்று தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details