தமிழ்நாடு

tamil nadu

குடியுரிமைத் திருத்தச் சட்ட நகல் எரிப்பு - 30 பேர் கைது!

கடலூர்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சட்ட நகலை எரித்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் 30 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

By

Published : Dec 23, 2019, 1:09 PM IST

Published : Dec 23, 2019, 1:09 PM IST

குடியுரிமை திருத்தச் சட்ட நகல் எரிப்பு போராட்டம்  protester burned the copy of CAA in cuddalore  மக்கள் ஜனநாயக இயக்கத்தினர் போராட்டம்  கடலூர் மாவட்டச் செய்திகள்  #CAAPROTEST
குடியுரிமை திருத்தச் சட்ட நகல் எரிப்பு: 30 பேர் கைது!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என்றும்; இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை எனவும் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பத்து நாட்களுக்கும் மேலாக அனைத்து மாநிலங்களிலும் கல்லூரி மாணவர்கள், அரசியில் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடலூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் குடியுரிமைத் திருத்தச் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

குடியுரிமைத் திருத்தச் சட்ட நகல் எரிப்பு: 30 பேர் கைது!

அப்போது, அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரைக் காவலர்கள் கைது செய்து, தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கோவை விமான நிலையத்தில் 6.99 கிலோ தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details