தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆய்வில் எழுந்த சந்தேகம்... பைக்கில் 120 லிட்டர் சாராயம்... கடத்தல்காரரை குண்டுக்கட்டாக தூக்கிய காவலர்கள்!

கடலூர்: இருசக்கர வாகனத்தில் 120 லிட்டர் சாராயத்தைக் கடத்திய நபரைக் காவல் துறையினர் குண்டர் தடுப்புக்காவலில் கைது செய்துள்ளனர்.

120 litres alcohol
சாராயம் கடத்தல்

By

Published : Dec 3, 2019, 8:24 PM IST

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் சாராயம் கடத்தப்படுவதாக காவல் துறைக்குத் தொடர்ந்து தகவல் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால், கடந்த மாதம் 16ஆம் தேதி, வேப்பூர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சிறுபாக்கம் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில், ஓரங்கூர்- புலிகரம்பூர் செல்லும் சாலையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், சாராயம் கடத்திச் செல்வது தெரிய வந்தது.
பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில், இருசக்கரவாகனத்தில் வந்தவர் ஓரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரவேல் என்பவரின் மகன் சுதாகர் (36) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர் மீது சிறுப்பாக்கம், விருத்தாசலம் காவல் நிலையங்களில் மதுவிலக்கு அமல் பிரிவில், ஏற்கெனவே மூன்று வழக்குகள் உள்ளதை கண்டுபிடித்தனர்.

எனவே, அவரின் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவரை ஓராண்டுக் காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க, ஆணையிட்டு சுதாகர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமியை அழைத்துச் சென்றதாக திருமணமான இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details