கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சக்தி கணேசன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
பெண்கள், முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அவர்களுக்கென சிறப்பு தொலைபேசி எண்கள் வழங்கப்படும். அவர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் விதமாக உதவி ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.