தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 19, 2020, 11:08 AM IST

ETV Bharat / state

'ஆம்பன்' புயல் தீவிரமாக வாய்ப்பு - மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்

கடலூர்: 'ஆம்பன்' புயல் நாளைக்குள் (மே 20) மிக தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு 'ஆம்பன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்புயலானது மே 18 முதல் 20ஆம் தேதிக்குள் மிகத் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்நிலையில் கடலூரில் கடல் வழக்கத்துக்கு மாறாக ராட்சத அலைகளுடன் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் இரண்டு ஏற்றப்பட்டது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால் கடலூரில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று( மே 18) கடலூர் துறைமுகம் பகுதியில் கடுமையான கடல் சீற்றம் இருந்ததால் பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் அலையில் சிக்கிக்கொண்டதால் இவர்களின் படகு சேதமடைந்தது. பின்னர் மற்ற மீனவர்களின் உதவியுடன் சிக்கிக்கொண்ட மூன்று பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எலக்ட்ரானிக் முகக்கவசம்... முன்னாள் ராணுவ அதிகாரி கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details