தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் மீன் மார்க்கெட்டில் சோதனை - 100 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கடலூர்: மீன் மார்க்கெட்டில் நடைபெற்ற சோதனையில் 100 கிலோ கெட்டுப்போன மீன்களை மீன்வளத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மீன் மார்க்கெட்டில் சோதனை
மீன் மார்க்கெட்டில் சோதனை

By

Published : Mar 6, 2020, 5:28 PM IST

Updated : Mar 6, 2020, 11:25 PM IST

தமிழ்நாடு முழுவதும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டது.

அதன்படி கடலூர் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திருப்பாப்புலியூர், முதுநகர் மீன் மார்க்கெட்டுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ரசாயனம் கலந்த மீன் எப்படி இருக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் இந்த சோதனையின்போது மீன் மார்க்கெட்டில் இருந்த கெட்டுப்போன 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மீன் மார்க்கெட்டில் சோதனை

இதையும் படிங்க: எடு... மீன...' - திருப்பூரில் கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த அலுவலர்கள்

Last Updated : Mar 6, 2020, 11:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details