தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

370 சட்டப்பிரிவு நீக்கம் - மா.கம்யூ கட்சி காட்டம்!

கடலூர்: காஷ்மீருக்கென பிரத்யேகமாக இருந்த 370 சட்டப்பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியதை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

By

Published : Aug 6, 2019, 2:17 PM IST

Updated : Aug 6, 2019, 3:49 PM IST

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை மத்திய பாஜக அரசு நேற்று நீக்கியது. இதனைக் கண்டிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தியது.

370 சட்டப்பிரிவு நீக்கம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 370 சட்டப்பிரிவை நீக்கியது, தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்பு, பொது மருத்துவத்தை சீர்குலைப்பது, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடையில்லாச் சான்று போன்ற அடக்குமுறை உரிமை பறிப்புச் சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுத் தலைவர் மாதவன் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Last Updated : Aug 6, 2019, 3:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details