கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தையும், மூத்த தலைவர் நல்லக்கண்ணு மீதும், முற்போக்கு கருத்துக்களோடு செயல்படும் சமூக அமைப்புகள் மீதும் சமூக ஊடகங்களில் சிலர் அவதூறு பரப்பினர்.
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குறித்து அவதூறு: நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
கடலூர்: கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Cuddalore cpi protest
அந்த சமூக விரோதிகள் மீது காவல் துறையில் புகார் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்று திரண்டு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் ஹரிகிருஷ்ணன், வட்டக்குழு உறுப்பினர்கள் நாகராஜ், பாக்கியம், அம்மாவாசை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.