தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணிகாய போடும் தகறாரில் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கடலூர்: துணி காய போடுவதில் ஏற்பட்ட தகறாரில் கல்லால் அடித்துக் கொலைசெய்த நபருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

court judgement for murder in cuddalore
court judgement for murder in cuddalore

By

Published : Feb 1, 2020, 10:43 AM IST

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பெரிய கண்ணாடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தனபாலன் என்பவரின் மகன் ஜோதிமணி (45) என்பவருக்கும் 2017ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி துணிகளைக் காய போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஜோதிமணி, ரமேஷை கல்லால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ரமேஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதன் தீர்ப்பை நேற்று நீதிபதி செந்தில்குமார் அறிவித்தார்.

பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்

இதில் குற்றவாளி ஜோதிமணிக்கு 1000 ரூபாய் அபராதமும் பத்து வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: சுந்தரக்கோட்டையில் விழா: சசிகலா பராக்... பராக்...!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details