தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2020, 6:23 PM IST

ETV Bharat / state

கரோனா வைரஸ் அச்சம்: வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு

கடலூர்: கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, இரு மாநில எல்லைகளில் வரும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

வாகனம் மீது கிருமிநாசினி தெளிக்கப்படும் காட்சி
வாகனம் மீது கிருமிநாசினி தெளிக்கப்படும் காட்சி

இந்தியாவில், கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால், மத்திய அரசு அதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. மேலும், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளி மாநிலங்களுக்கு செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதனால், பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் மீது கிருமிநாசினி தெளிக்கப்படும் காட்சி

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில எல்லைகளில் வரும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மேலும் புதுச்சேரி மாநில ஆட்சியர் அருண் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனையடுத்து, அப்பகுதிகளில் வரும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியர்கள் வழங்கினர்.

இதைம் படிங்க:கொரோனா பீதி: ம.பி. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details