உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கடலூரில் நேற்று முன் தினம் வரை (ஜூலை 15) கரோனா தொற்றால் 1,619 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று (ஜூலை 16) மேலும் 24 பேருக்குக் கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,643ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம்(ஜூலை 15) வரை 1,220 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று (ஜூலை 16) மேலும் 13 பேர் சிகிச்சைப் பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடலூர் கரோனா வைரஸ் அப்டேட்: 24 பேர் அட்மிட்; 13 பேர் டிஸ்சார்ஜ்
கடலூர்: மாவட்டத்தில் நேற்று (ஜூலை 16) ஒரே நாளில் 24 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா
இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து மொத்தம் 1,233 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை சிகிச்சைப் பலனின்றி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.