தமிழ்நாடு

tamil nadu

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியது

By

Published : Jul 7, 2019, 2:03 PM IST

கடலூர்: ஆனித்திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று தொடங்கியது.

தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோயிலில், ஆனந்த நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறும்.

தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்

இந்நிலையில், ஆனித்திருமஞ்சன திருவிழா தேரோட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் 4 வீதிகளையும் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நாளை காலை மகா அபிஷேகமும், பல்வேறு ஆராதனை நிகழ்ச்சிகள், மதியம் 2 மணிக்கு ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details