தமிழ்நாடு

tamil nadu

மணல் குவாரி திறக்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: விருத்தாசலத்தில் ஜனநாயக மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மணல் குவாரி திறக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

By

Published : Jul 16, 2019, 4:35 PM IST

Published : Jul 16, 2019, 4:35 PM IST

protest

மணல் குவாரியை திறக்கக் கோரி விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஜனநாயக மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் (DTUC) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜனநாயக தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வேலு, மாவட்டத் தலைவர் மாரிமுத்து, கடலூர் மாவட்டச் செயலாளர் ராமு, மக்கள் விடுதலை தமிழ்நாடு செய்தி தொடர்பாளர் விடுதலை குமாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மணல் குவாரி திறக்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இதில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ரூ. 50 ஆயிரம் மாதச் சம்பளத்துடன் வேலை வழங்க வேண்டும். விவசாயத்தை நாசமாக்கும் கடலூர் நாகை பெட்ரோலிய மண்டல மாவட்டங்களாக அறிவித்து அதை திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details