தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருத்தாசலத்தில் 75.56 % வாக்குப்பதிவு

கடலூர்: விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் 75.56 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

விருத்தாசலத்தில் 75.56 % வாக்குப்பதிவு

By

Published : Apr 19, 2019, 9:33 AM IST

கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மாதிரி வாக்குப்பதிவு சாவடிகளில் வாழைமரம், மாங்கொத்து தோரணம் போன்றவை வைக்கப்பட்டு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக பிரத்தியேக நாற்காலி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றைத் தேர்தல் அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் பூதாமூர், புதுக்கூரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானது. உடனடியாக கடலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரசாத் வேறு இயந்திரத்தை அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கால தாமதத்துடன் ஆரம்பித்து வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

விருத்தாசலத்தில் 75.56 % வாக்குப்பதிவு

கடலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் மருத்துவர் கோவிந்தசாமி விருத்தாசலம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பல்வேறு வாக்குச்சாவடிகளை மேற்பார்வையிட்ட அவர், தேர்தலில் இளம் வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

குடும்பத்துடன் பாமக வேட்பாளர் மருத்துவர் கோவிந்தசாமி

.

ABOUT THE AUTHOR

...view details