கோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,இதையடுத்து பொள்ளாச்சிப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்து சிபிசிஐடி விசாரணைக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு தற்பொழுது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்
இதையடுத்து வங்கி ஊழியர் சங்கம் கட்டிடத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை கூட்டமைப்பு சார்பில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசியவர்கள், ”கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்குப் பின் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து வழக்கு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெளியில் உள்ள பிரபல புள்ளிகள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டும் இன்று வரை கைது செய்யப்படவில்லை” என்பதை தெரிவித்தனர்.