தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் இயங்கும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உரிமம் இல்லாத குடிநீர் உற்பத்தி ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் இயக்கி வரும் குடிநீர் ஆலைகளில் பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி வட்டத்துக்குட்பட்ட பகுதியில் இயக்கி வரும் 4 குடிநீர் ஆலைகளில் நடத்திய ஆய்வில், இரு ஆலைகள் முறையான அனுமதியின்றி இயங்கி வருவது தெரிய வந்தது. பின்னர், அந்த இரண்டு ஆலைகளும் சீல் வைக்கப்பட்டன.
நிறுவனத்தை ஆய்வு செய்த அலுவலர்கள் அதேபோன்று, ஆனைமலை வட்டத்தில் ஆழியாறு பகுதியில் முறையான அனுமதியின்றி இயக்கி வந்த ஆழியாறு மினரல்ஸ் என்னும் குடிநீர் ஆலைக்கு வட்டாட்சியர் வெங்காடச்சலம் தலைமையிலான வருவாய் துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் - அரசின் சமூக நல குடிநீர் நிலையங்களுக்கு வரவேற்பு