தமிழ்நாடு

tamil nadu

கரோனா அச்சுறுத்தல்: வெறிச்சோடிய வால்பாறை

By

Published : Mar 18, 2020, 2:12 PM IST

கோவை: வால்பாறையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது.

visiters prohibition in valparai due to corona virus precautionary activities
visiters prohibition in valparai due to corona virus precautionary activities

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதாக வதந்திகள் வெளியானதையடுத்து, வால்பாறையிலிருந்து பேருந்துகள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, கருமலை புனித வேளாங்கண்ணி ஆலயம் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டதன் காரணமாக, ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

இதனால், வியாபாரிகள், சிறு, குறு நடைபாதை கடைகள் போன்ற வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெறிச்சோடிய வால்பாறை

கரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கியிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யவும், பேருந்து நிலையம், வங்கிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் மக்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வேலூரில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

ABOUT THE AUTHOR

...view details