தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 3, 2020, 11:30 PM IST

ETV Bharat / state

தொழிலாளர்களைப் பணிக்கு வர வலியுறுத்தும் தனியார் நிறுவனங்கள்!

கோயம்புத்தூர்: வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை வேலைக்கு வரவேண்டும் என தனியார் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

valpari labour issue
valpari labour issue

கோயம்புத்தூர் வால்பாறை பகுதியில் சுமார் 45 ஆயிரம் பேர் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அரசு தேயிலை தோட்டம், டேண்டீ நிறுவனம், தனியார் துறை டாடா காபி, பி.கே.டி., பாம்பே பார்மா, உட்ப்ரீயர், பாரீ, அக்ரோ, ஜெயஸ்ரீ போன்ற நிறுவனங்கள், தொழிற்சாலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்கு அரசிடம் அனுமதி பெற்றதுபோல் ஒரு போலியான கடிதத்தை தயார் செய்துள்ளனர்.

இதனை, தொழிலாளர்களிடம் காட்டி, அரசிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி தொழிலாளர்களை உடனடியாக பணிக்கு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கேட்டு அதிரிச்சியடைந்த பி.கே.டி. காஞ்சமலை எஸ்டேட் தொழிலாளர்கள், "கரோனாவால், வீட்டை விட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ளது.

தொழிலாளர்களை பணிக்கு வர வலியுறுத்தும் தனியார் நிறுவனங்கள்

இந்நிலையில் ஒரு சில நிறுவனங்கள் வேலைக்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. நாங்கள் வாழ்வதா, சாவதா எனத் தெரியவில்லை" எனக் கூறி வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்ததை முற்றுகையிட்டனர். பின்னர், அலுவலர்கள் அளித்த நம்பிக்கையின் பேரில் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details