கோவை மாவட்டம், வால்பாறையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தேயிலை தோட்டத் தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். இவர்களில் படித்த சிலர் வேலைத்தேடி குடும்பங்களுடன் கோவை,பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்து விடுகின்றனர். இதனால் வால்பாறை பகுதிகளில் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் குறைந்து வருகிறது.
வால்பாறை அருகே மாணவர்சேர்க்கை இல்லாததால் அரசுப்பள்ளிக்கு மூடுவிழா
கோவை:வால்பாறை அருகே இயங்கிவந்த பழமை வாய்ந்த அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டத்திற்குட்பட்ட சின்கோனா பெரியகல்லார் பகுதியில் 30-க்கும் குறைவான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் கல்வி கற்கும் வகையில், அரசு சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப பள்ளி ஒன்றையும் தொடங்கியது.
ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கையை கொண்டிருந்த இந்தப் பள்ளியில் தற்போது, மாணவர்கள் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிட்டது. இதையறிந்த மாவட்ட கல்வித்துறை அங்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்ததோடு மட்டுமல்லாமல், பள்ளியையும் நிரந்தரமாக முடியுள்ளது. ஒரு மாணவர் சேர்க்கைக் கூட இல்லாததால் பள்ளியை மூடிவிட்டதாக மாவட்ட கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.