பொள்ளாச்சி-வால்பாறை செல்லும் வழியில் ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு இருக்கிறது. இதனைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஆபூர்வ இனமான இருவாச்சி பறவை கூட்டம் ஒன்றாக பறப்பதை கண்டு களித்தனர்.
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இருவாச்சி பறவை இனம்
கோவை: பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் இருவாச்சி பறவையை காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
இருவாச்சி பறவை
இதுகுறித்து, வனசரகர் காசிலிங்கம் கூறுகையில், இருவாச்சி இனம் பாதுகாக்கப்பட வேண்டிய பறவையாகும். இது குடும்பத்துடன் அடர் வனப்பகுதியில் கூடுகட்டி வாழக்கூடியது. இந்த இருவாச்சி பறவை இனம் நவமலை, அப்பர் ஆழியார், காடம்பாறை ஆகிய இடங்களில் அதிகளவில் தென்படுகிறது. வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் இருவாச்சி பறவையை காண அதிக நேரம் செலவிடுகின்றனர், என்றார்.