தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனப்பேரணி - தலைக்கவசம் இல்லாமல் கலந்துகொண்ட பாஜகவினர்

கோயம்புத்தூர்: பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

By

Published : Feb 23, 2021, 9:47 PM IST

Updated : Feb 23, 2021, 9:59 PM IST

இருசக்கர வாகன பேரணி
இருசக்கர வாகன பேரணி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 25ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்பு கொடிசியாவில் நடைபெறும் அரசு நிகழ்வில் கலந்து கொள்ளும் அவர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் பிரதமரை வரவேற்கும் விதமாக, கோயம்புத்தூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இருசக்கர வாகனப் பேரணி - தலைக்கவசம், முகக்கவசம் இல்லாமல் கலந்துகொண்ட பாஜகவினர்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "பிரதமரை வரவேற்கும் விதமாகவும் பொதுக்கூட்டத்தில் மகளிர் அதிகம் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. பாஜக சார்பில் பிரதமர் கலந்து கொள்ளும் முதல் பரப்புரைக் கூட்டம் இது.

சேலம் மாவட்டம் முதல் நீலகிரி மாவட்டம் வரை, மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து லட்சம் பேர் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

பாஜகவில் இணைய இளம் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்" என்றார்.

இருசக்கர வாகன பேரணி

குறிப்பாக இந்தப் பேரணியில் பெரும்பாலான பெண்கள் தலைக்கவசம், முகக்கவசம் இல்லாமல் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பாஜக பேரணி: எதுக்கு வம்பு? நழுவிய அதிமுக!

Last Updated : Feb 23, 2021, 9:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details