கோயம்புத்தூர்: நரசிபுரம் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வைதேகி நீர்வீழ்ச்சி உள்பட பல சிற்றோடைகள் அமைந்துள்ளன. இதனால் இந்தப் பகுதி எப்போதும் பசுமையாக காணப்படும். இங்கு யானை உள்ளிட்ட வனவிலங்குகளும் உள்ளன.
யானைகள் இரவு நேரங்களில் உணவிற்காக அருகிலுள்ள கிராமங்களின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து உணவு சாப்பிட்டுவிட்டு அதிகாலையில் வனப்பகுதிக்குள் திரும்புவது அங்கு வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு (ஜூலை 28) வைதேகி நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு ஆண் யானைகள் ஆத்தூர் கிராமத்திலிருந்து அதிகாலையில் வனப்பகுதி திரும்பும் போது பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் சிறுவாணி குழாய் அருகில் உள்ள குட்டையில் தஞ்சமடைந்துள்ளன.