கோயம்புத்தூர்:இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்தாலும் மளிகை கடை, காய்கறி கடை, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வாங்குவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நீதிமன்றம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதை புறக்கணிக்க கூடாது என அறிவுரை வழங்கி உள்ளது.
ஆனாலும் சில இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு மின்சார வாரிய அலுவலகம் எதிரே இன்று (நவ.10) புதிதாக யாழ் பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது.