பொள்ளாச்சி அருகேயுள்ள சுப்பையா கவுண்டன் புதூர் பெரிய பண்ணாடி அம்மன் கோயிலின் 2 ஏக்கர் விளை நிலம் உள்ளது. இந்த நிலம் இந்து சமய அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சமீபகாலமாக இந்த நிலத்தில் விவசாய பணி மேற்கொள்ளாத நிலையில் ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சேகரிக்கக்கூடிய நெகிழிக் கழிவுகளை கடந்த ஒரு மாதமாக மர்ம நபர்கள் கொட்டியும், இரவு நேரங்களில் தீ வைத்து எரித்தும் வருகின்றனர்.
இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம், சுப்யையா கவுண்டன் புதூர் ஊராட்சி அலுவலகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நெகிழி கழிவுகளைக் கொட்டுவதை தடுக்க சார் ஆட்சியரிடம் புகார் மனு. எனவே கோவில் நிலத்தில் உள்ள நெகிழிக் கழிவுகளை அப்புறபடுத்தி நிலத்தினை மர்ம நபர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி. சுப்பையா கவுண்டன் புதூர் கிராம மக்கள் சார் ஆட்சியிரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க :ஆன்மிக கண்காட்சி முன்னோட்ட கலை நிகழ்ச்சியில் 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்பு!