தமிழ்நாடு

tamil nadu

போதை பொருட்களை தடுப்பதில் குறை உள்ளது.. கிருஷ்ணசாமி

போதை பொருட்களை தடுப்பதில் குறை உள்ளது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 14, 2022, 10:23 PM IST

Published : Aug 14, 2022, 10:23 PM IST

போதைப் பொருட்கள் தடுப்பதில் எங்கேயோ குறை உள்ளது கிருஷ்ணசாமி பேட்டி
போதைப் பொருட்கள் தடுப்பதில் எங்கேயோ குறை உள்ளது கிருஷ்ணசாமி பேட்டி

கோவை: குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்திப்பில், அப்போது பேசிய அவர் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். சுதந்திரத்திற்காக எண்ணற்றவர்கள் பாடுபட்டுள்ளனர் பலரும் சிறைச்சாலையிலேயே வாழ்க்கையை முடித்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து எடுத்துச் சென்ற இயற்கை வளங்கள் பல லட்சம் மதிப்புள்ளவை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நாம் உண்மையான சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தற்பொழுது பல்வேறு மேம்பாடுகள் அடைந்துள்ளன. இருப்பினும் சில நாடுகளை ஒப்பிடும் பொழுது கல்வி ஆகியவற்றில் இந்தியா பின்தங்கி உள்ளது. இளைஞர் சமுதாயம் சில காலங்களாக மது கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கு ஆளாகி வருகிறது.

கிருஷ்ணசாமி

இது மிகவும் கவலை அளிக்கிறது. மது, கஞ்சா போன்ற போதை பழக்கம் உடல் நலம் மட்டுமல்லாமல் மனநலத்தையும் பாதிக்க செய்யும் இதனால் போராடி பெற்ற சுதந்திரத்தை இழக்க கூடிய அபாயத்தில் நாம் இருக்கிறோம். நாளை சுதந்திர தின நாள் அன்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மது புகை போதை இல்லா பாரத தேசம் தமிழ்நாட்டை உருவாக்கும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தமிழகத்தில் இருசக்கர வாகன பேரணி மேற்கொள்ள உள்ளோம்.

இது இரண்டாவது சுதந்திரப் போர் என்று கூட சொல்லலாம். போதைப் பொருட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது மாநில மற்றும் மத்திய அரசு இதனை தடுப்பதற்கு முன்வர வேண்டும். முக்கியமாக கஞ்சா, அபினி போதை வஸ்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம், நீர், வான் வழி போன்ற அனைத்து வழிகளிலும் போதைப் பொருட்கள் வரும் பொழுது இதனை தடுப்பதில் எங்கேயோ குறை உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Video: மின்னொளியில் மூவர்ணக்கொடிபோல் ஜொலிக்கும் மேட்டூர் அணை

ABOUT THE AUTHOR

...view details