கோவை விமான நிலையத்தில் ராணுவ வீரர் கமலேஷ் உடலுக்கு அதிகாரிகள் அஞ்சலி! கோயம்புத்தூர்:பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பீரங்கி படைப் பிரிவைச் சேர்ந்த கமலேஷ் (வயது 24), யோகேஷ் குமார் (வயது 24), சந்தோஷ் நகரல் (வயது 25) மற்றும் சாகர் பன்னே (வயது 25) ஆகியோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, அனைவரது உடலும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரவர் வீடுகளுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர் கமலேஷ், சேலம் மாவட்டம் மசக்காளியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அதன்படி சேலத்தில் உள்ள கமலேஷ் இல்லத்திற்கு, உடலைக் கொண்டுவருவதற்காகக் காலை விமானம் மூலம், உடல் கோவை கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க:Inspector vasanthi: வழிப்பறி வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் பணிநீக்கம்: மதுரை டிஜிபி அதிரடி!
பின்னர், கோவை விமான நிலைய சரக்கு முனையத்தில், இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கமலேஷின் உடலைப் பெற்றுக் கொண்டனர். பின்னர், கோவை விமான நிலைய சரக்கு முனையத்தில் கமலேஷின் உடலுக்கு ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவத்தினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், கோவையிலிருந்து இராணுவ வீரர் கமலேஷின் உடல், அமரர் ஊர்தி மூலம் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் கிராமத்திற்குச் சாலை மார்க்கமாகக் கொண்டு செல்லப்பட்டது. கமலேஷின் உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த கிராமத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ் கலாசாரம் ஆதியும் அந்தமும் அற்ற நிலையாக விளங்குகிறது - பிரதமர் மோடி!